முற்காலத்தில் பிரம்மாவிற்கு ஐந்து தலைகள் இருந்தது. அதனால் அவருக்கு கர்வம் ஏற்பட்டது. அவரது கர்வத்தை அடக்குவதற்கு சிவபெருமான் பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்ய, கபாலம் அவரது கையில் ஒட்டிக்கொண்டது. சிவபெருமான் கையில் கபாலத்துடன் இத்தலத்திற்கு வந்தபோது, மகாவிஷ்ணு திருமகளை அனுப்பி அந்த கபாலத்தில் பிச்சையிடச் செய்தார். அதனால் சிவபெருமானின் சாபம் நீங்கியது.
அதனால் இத்தலத்து மூலவர் 'ஹரசாபவிமோசனப் பெருமாள்' என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் கமலநாதன். தாயார் 'கமலவல்லி' என்று வணங்கப்படுகின்றார். அகத்தியருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
இக்கோயிலை ஒட்டி பிரம்மாவின் கோயில் இருந்தது. அது தற்போது மூடப்பட்டுள்ளது. இங்கு இருந்த பிரம்மா மற்றும் சரஸ்வதி சிலைகள் அருகில் உள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன.
திருமங்கையாழ்வார் 1 பாசுரம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|